மனைவிக்கு வளைகாப்பு நடத்தியதால் ஏற்பட்ட பிரச்சனையில் கணவன் தற்கொலை !

சென்னை மாதவரம் அருகே மனைவிக்கு வளைகாப்பு நடத்தியதால் ஏற்பட்ட பிரச்சனையில் கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாதவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக சவுந்தர்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.பாலகிருஷ்ணன் மனைவியின் மீது அதிக பாசம் கொண்டவர்.சமீபத்தில் ஊரில் உள்ள அனைவரும் பொறாமைப்படும் அளவிற்கு மனைவியின் வளைகாப்பை பிரமாண்டமாக நடத்தியுள்ளார்.இந்த நிலையில் கடன் வாங்கி வளைகாப்பு நடத்தியதற்காக சவுந்தர்யா கணவனிடம் சண்டை போட்டதாக தெரிகிறது. 

இதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன், திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.இந்த சம்பவமானது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment