பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை அடுத்து அரண்மனையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகள் பொதுவாக பயன்படுத்தும் டெலிகிராம் செயலி வழியாக கேட் மிடில்டன் மீதான அச்சுறுத்தல் தகவல் பகிரப்பட்டுள்ளது.
அதில் கேட் மிடில்டனை உணவில் விஷம் கலந்து கொல்ல இருப்பதாக தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி அவர் உணவுப் பொருட்களை வாங்கும் வணிக வளாகம் எது என்பது போன்ற தகவலையும் பகிர்ந்துள்ளனர்.
குறித்த தகவலை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ள பிரித்தானிய உளவு அதிகாரிகள்,
அது தொடர்பில் முக்கிய தகவல் ஒன்றையும் பகிர்ந்துள்ளனர். பொதுவாக ஐ.எ.ஸ் பயங்கரவாத அமைப்பானது தங்கள் திட்டம் தொடர்பில் பகிரப்படும் தகவல்களை குறிப்பிட்ட மணித்துளிக்குள் அழித்துவிடுவார்கள்.
தற்போது கேட் மிடில்டன் தொடர்பான தகவலையும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் அழித்துள்ளது பிரித்தானிய அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே பிரித்தானிய அரண்மனையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment