யாழ்ப்பாணத்தில் சாரதி மீது தாக்குதல்!யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதி மீது, தனியார் பேருந்து சாரதி தாக்குதல் மேற்கொண்டதில் இலங்கை போக்குவரத்து சபை சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் நேற்று  இரவு 7.30 மணியளவில் யாழ்ப்பாணம் ஆலடி சந்தியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது வசாவிளான் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தினை பின்னால் வந்த தனியார் பேருந்தின் சாரதி மறித்து, தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்த இலங்கை போக்குவரத்து சபை சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இரண்டு பேருந்துக்களும் போட்டி காரணமாக வேகமாக பயணித்தது என்றும், அதனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலையடுத்தே குறித்த சாரதி தாக்கப்பட்டார் என்றும் அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பேருந்து சாரதிகள் பயணிகளின் உயிர்களை பணயம் வைத்து தமக்குள் போட்டியிடுவதை நிறுத்த உரிய தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மெலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment