சரத் என்.சில்வாவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு!

நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவை எதிர்வரும் 7 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சரத் என்.சில்வாவுக்கு எதிராக மூத்த பேராசிரியர் சந்திரகுப்த தேணுவ, பேராசிரியர் ஹேவாவடுகே சிறில் மற்றும் பேராசிரியர் பிரியந்த குணவர்தன ஆகியோர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ மற்றும் எஸ்.துரைராஜா ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது


Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment