ரணிலின் வியூகம்! நாடாளுமன்ற உறுப்பினராகின்றார் சந்திரிகா?!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விரைவில் இராஜினாமா செய்யவுள்ளதாகவும் கொழும்பு அரசியல் ஆய்வாளர்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பீடத்தின் ஆலோசனையின் பிரகாரமே அவர் விலகிறார் எனவும் சந்திரிக்கா குமாரதுங்க மீண்டும் நாடாளுமன்றம் வருவதற்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே இந்கர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரே இதற்கான கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றனரர் எனவும் இந்த விடயத்தில் சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகின்றது.

மகிந்த, மற்றும் மைத்திரி கூட்டணிக்கு அரசியல் ரீதியில் அடி கொடுப்பதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியினால் இந்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.

அதேசமயம், இந்த விடயம் குறித்து சந்திரிக்காவின் நிலைப்பாடு என்னவென்பது இன்னும் வெளியாகவில்லை' என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment