நவீனமயமாகும் யாழ்.மத்திய பேருந்து நிலையம்

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம், அடுக்குமாடி வாகனத் தரிப்பிடம், வர்த்தகத் தொகுதி என்பவற்றை உள்ளடக்கியதாகவும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் நவீன சந்தை ஆகியவற்றை இணைக்கும் மேம்பாலத்தை உள்ளடக்கியதாகவும் புதிதாக அமைக்கப்படவுள்ளது.

பெருநகர மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு இதற்காக  400 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது.

யாழ்.மத்திய பேருந்து நிலையம் தற்போது அமைந்துள்ள காணியிலேயே நவீனமயப்படுத்தப்பட்ட பேருந்து நிலையம் உருவாக்கப்படவுள்ளது.

மத்திய பேருந்து நிலையத்தை மறுசீரமைக்கும் காலப் பகுதியில், யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்துக்கு முன்பாகவுள்ள காணியில், மையப் பேருந்து நிலையம் தற்காலிகமாக இயங்கும் என்று யாழ்ப்பாண மாநகர சபை மேயர் இ.ஆனோல்ட்   அறிவித்துள்ளார்.





Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment