மாலை தீவில் சூர்யா குடும்பம்

ஓய்வை குடும்பத்தினருடன் செலவிட வேண்டுமென்றால் வெளிநாடுகளுக்கு பறப்பது தான் திரையுலக பிரபலங்களின் வழக்கம். அங்குதான் அவர்களுக்கு இரசிகர்கள் தொல்லை இருக்காது. 

ரஜினிகாந்த், தனுஷ் அவர்களது குடும்பத்தாருடன் ஒரு வாரம் முன்னதாகவே அமெரிக்கா சென்றனர். புத்தாண்டைக் கொண்டாட நடிகை நயன்தாரா, அவருடைய காதலன் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்கா பறந்தார். 

நடிகர் சூர்யா, அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாலை தீவில் புத்தாண்டைக் கொண்டாடியுள்ளார். அவருடைய புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் சூர்யா. 

சூர்யா நடித்து அடுத்து தமிழ்ப் புத்தாண்டுக்கு 
”என்ஜிகே” படம் வெளிவர உள்ளது. அதன் பின் ”காப்பான்” படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோதிகா, இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment