இறந்தவரின் உடலைக் கொண்டு செல்ல உதவிக்கரம்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில், சேர்க்கப்பட்டு   உயிரிழக்கும் பாமர மக்களின் உடலை எரிபொருள் செலவுடன் மட்டும் விநியோகிக்கும் திட்டத்தில், முதல் கட்டமாக வாகனம் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

வடக்கில் உள்ள ஒரேயொரு போதனா மருத்துவமனை என்ற அடிப்படையில் ஏனைய மாவட்ட மருத்துவமனைகளில் இருந்தும், மாவட்டத்தின் ஏனைய மருத்துவமனைகளில் இருந்தும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு நோயாளர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அனுமதிக்கப்படுபவர்களில் சிலர் சிகிச்சை பயனின்றி உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

அவ்வாறு உயிரிழப்பவர்களின், ஏனைய மாவட்டத்தவர்கள் மற்றும் குடாநாட்டின் பின் தங்கிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தமது உறவின் உடலைக் கொண்டு செல்வதற்காக அதிக பணத்தை செலவு செய்ய வேண்டிய நிலமையில் உள்ளனர்.

இதனால் வடக்கு மாகாணத்தில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களுக்கு எரிபொருள் செலவை மட்டும் செலுத்தி உடலை எடுத்துச் செல்லும் வாய்ப்பு தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக புலம் பெயம் பெயர்ந்து வாழும் கனடா வாழ் உறவுகள் நிதி உதவியை வழங்கியுள்ளனர். அந்த நிதியில் இருந்து ஓர் வாகனம் தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.





Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment