முல்லைத்தீவு, மாங்குளம், நட்டகண்டல் பிரதேசத்தில் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் மூன்று வயதுக் குழந்தை  உயிரிழந்துள்ளது.
குழந்தை வீட்டினுள் இருக்கும் போது  மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து,  குழந்தை மல்லாவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
குழந்தை   கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

0 comments:
Post a Comment