சிறையில் நடந்த கொடூரம்!

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கைதிகளை கடந்த வருடம்  நவம்பர் மாதம்  22  ஆம் திகதி  சிறைச்சாலை அதிகாரிகளினால் அடித்து சித்திரவதைக்கு உட்படுத்தும் அதிர்ச்சி காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்  என  சிறைக்கைதிகளின் உரிமைகளை  பாதுகாப்பதுகாக்கும் குழுவின்  தலைவர் சட்டத்தரணி சேனக்க பெரேரா வேண்டுகோள் விடுத்ததுடன் , குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சமூக, மதத்திற்கான  மத்திய நிலையத்தில்  இன்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது   கருத்து  தெரிவிக்கையிலேயே  சேனக்க  பெரேரா மேற்கண்டவாறு  தெரிவித்தார்.
அவர்  மேலும் குறிப்பிடுகையில் ,
 கடந்த காலங்களை எடுத்துக்கொண்டால்  1983  ஆம் ஆண்டு  வெலிக்கடை சிறைச்சாலையில்  இருந்த கைதி ஒருவர் கண்ணாடி மற்றும்  முட்களால் தாக்கப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.  
2011 ஆம் ஆண்டும்  மஹிந்த ராஜபக்ஷவின்  ஆட்சிக்காலத்திலும் கூட   20  இற்கும்  மேற்பட்ட  சிறைக்கைதிகள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் .
இதேவேளை  இரத்தினபுரி சிறைச்சாலையில் ஜீவானந்தன் எனப்படும் கைதி ஒருவர் கைகள்  துண்டிக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு  கொலை  செய்யப்பட்ட  சம்பவமும்  கடந்த காலங்களில் பதிவாகியுள்ளது.  
இந்த நிலையில் கடந்த  வருடம் நவம்பர்  மாதம்  22  ஆம்  திகதி   அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில்  விளக்கமறியலில்  வைக்க்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு  சிறைச்சாலை பொறுப்பதிகாரிகளால்  இழைக்கப்பட்டுள்ள  சித்திரவதையை வெளிப்படுத்தும்  காணொளி ஆதாரம்  கிடைக்க்பபெற்றுள்ளது.  
குறித்த  கைதிகளை பார்வையிட வரும் உறவுகள் சிறைச்சாலை அதிகாரிகளால்  முறைகேடாக நாடாத்துவதற்கு  எதிர்ப்புத் தெரிவித்து சிறையில் இருந்த கைதிகள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
இந்நிலையிலேயே ஆர்ப்பாட்டம் நடத்திய கைதிகள் மீது சிறைச்சாலை  அதிகாரிகள் மிருகத்தனமாக தாக்கியுள்ளனர்.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment