இந்தியாவின் பிரபல தொழில் அதிபராக இருப்பவர் முகேஷ் அம்பானி. அவருக்கு பல்வேறு விதமான தொழில்களும், தொழில் நிறுவனங்களும் உள்ளன.
பல வேறு தொழில்களில் கால்பதித்திருக்கும் முகேஷ் அம்பானியின் நிறுவனம், சினிமா தயாரிப்பிலும் கால்பதித்து, பல இந்தி படங்களை எடுத்துள்ளது.
இந்த நிலையில், அவரது சினிமா தயாரிப்பு நிறுவனம், தமிழ் படத் தயாரிப்பிலும் கால் பதிக்க முடிவெடுத்துள்ளது.
இதற்காக, நடிகர் ரஜினியை வைத்து, தமிழில் முதல் படம் தயாரிக்கலாம் என, முகேஷ் அம்பானி நிறுவனம் முடிவெடுத்து, அதற்கான முயற்சிகளில் இறங்கியது.
அது சரிவரவில்லை என்பதால், தமிழ் திரையுலகின் பிரபலமான மற்றும் வெற்றிகரமான நடிகர்கள் என வர்ணிக்கப்படும் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி இருவரையும் வைத்து, வரிசையாக படங்களைத் தயாரிக்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
இதற்காக, நடிகர் சிவகார்த்திகேயனுடன், முதல் கட்ட பேச்சுவார்த்தையை அம்பானி நிறுவனம் பேசி முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment