எரிபொருள் விலையேற்றத்தால் பிரான்ஸில் மஞ்சள் ஜாக்கெட் போராட்டம்



பிரான்ஸில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக லட்சக்கணக்கானோர் திரண்டு மஞ்சள் ஜாக்கெட் அணிந்து பெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் அந்நாடு ஸ்தம்பித்துள்ளது .

கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுக்கள் மீதான வரியை உயர்த்தியுள்ளது. இது இந்த ஆண்டு மேலும் உயரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான முதலீடுகளுக்கு நிதி தேவைப்படுவதால் எரிபொருள் மீது அதிகப்படியான வரி விதிக்கப்படுவதாக அதிபர் மக்ரோன் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி மின் கட்டணத்தையும் உயர்த்த பிரான்ஸ் அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களின் போராட்டம் தொடங்கியது.

பிரான்ஸில் கார்களின் முக்கிய எரிபொருளான டீசலின் விலை, ஒரு லிட்டருக்கு சராசரியாக 1.24 யூரோக்கள் முதல் 1.53 யூரோ என கடந்த 12 மாதங்களில் 24 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. பிரான்ஸ் அரசு இதற்குக் காரணமாக உலக வெப்பமயமாதலைத்  தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்று எனக் கூறியுள்ளது.

இந்த விலை உயர்வால் அன்றாட செலவுகள் மிகவும் அதிகமாகி உள்ளதால் மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மற்றும் அவரது அரசாங்கம், நாடு முழுவதும் பொருள் வரியை உயர்த்துவதற்கு அதிகமான நடவடிக்கைகளை எடுக்க முற்படுவதால், பிரான்சின் முக்கால் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைவதில்லை என்பது  மக்கள் முன்னெடுத்திருக்கும் 'மஞ்சள் ஜாக்கெட் போராட்டம்' மூலம் தெரிகிறது.

கடந்த  இரண்டு மாதங்களில் 'மஞ்சள் ஜாக்கெட்' போராட்டதின்  ஆர்ப்பாட்டங்கள், மக்ரோனின் ஜனாதிபதி பதவியைத் துண்டித்து, குடும்ப வரவுசெலவுத் திட்டங்களைக் கருத்தில் கொண்டு  திட்டமிடப்பட்ட எரிபொருள் வரி உயர்வை அகற்றுவதற்காக மக்கள் போராடினர்.
ஏப்ரல் 2018 நடத்தப்பட்ட வாக்கெடுப்பில்  59 சதவீதத்தினர், மக்ரோன் அரசாங்கத்தால் மகிழ்ச்சியற்ற நிலையில்  இருப்பதாக தெரியவந்தது, இருப்பினும் தற்போது  ஜனவரி 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட 1,004 மக்களது வாக்கெடுப்பில்   75  சதவீத மக்கள் இந்த அரசாங்கத்தால் மகிழ்ச்சியற்ற நிலையில் உள்ளது தெரிகிறது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஐம்பது சதவீதத்தினர் போராட்டம்  தொடர வேண்டும் என்று கருதுகின்றனர். இந்த மஞ்சள் ஜாக்கெட் பிரான்ஸில் உள்ள வாகன ஓட்டுநர்களின் சீருடையாகும். கார் ஓட்டுநர்கள் ஒருங்கிணைத்த இந்த போராட்டம் ஒரு கட்டத்தில் மக்கள் போராட்டமாக மாறியது. 

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment