உலக கோடீஸ்வர் ஜெஃப் பெஸோஸ் தமது காதலியுடன் எடுத்துக்கொண்டஅந்தரங்க புகைப்படங்கள்அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் தமது காதலியுடன் எடுத்துக்கொண்ட அந்தரங்க புகைப்படங்கள் கசியலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தொலைக்காட்சி நட்சத்திரம் லாரன் சான்சஸ் என்பவருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக ஜெஃப் பெஸோஸ் தமது மனைவி மிக்கின்ஸியை விவாகரத்து செய்ய உள்ளார்.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்ட காதல் சொட்டும் குறுந்தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில்,

ஜெஃப் பெஸோஸ் நிர்வாணமாகவும் சட்டை அணியாமலும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகைப்படங்களை, பெஸோஸின் காதல் விவகாரத்தை முதலில் வெளிக்கொண்டு வருவதற்கான ஆதாரங்கள் பத்திரிகை வசம் உள்ளதாகவும், அது வெளியே கசிய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

லாரன் சான்சஸ் என்பவருடன் ஏற்பட்ட தீவிர காதலால் பெஸோஸ் தமது அந்தரங்க புகைப்படங்களை அவருக்கு அனுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் லாரன் மிகவும் வெகுளியாக நடந்துகொண்டார் எனவும், அந்தரங்க புகைப்படங்களை பத்திரிகைக்கு பகிர்ந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என பெஸோஸ் கோபத்தில் பேசியதாக கூறப்படுகிறது.
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment