ஊடகத்திற்கு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்த பிரதமர்!

பிரதமர்  ரணில்  விக்ரமசிங்க  பெயர்  குறிப்பிட்டு  ஊடகங்களுக்கு  அச்சுறுத்தல்  விடுத்தமை   முறையற்ற   செயற்பாடாகும். என   பொதுஜன  பெரமுன    முன்னணியின்  சட்டத்தரணிகள்   சங்கம்  கண்டனம்  வெளியிட்டுள்ளது.
பொதுஜன  பெரமுன  முன்னணியின்  தலைமை  காரியாலயத்தில்  இன்று   இடம்பெற்ற  ஊடகவியலாளர்  சந்திப்பில்  கலந்துகொண்டு  கருத்துரைக்கும் போதே  அவ்வமைப்பினர்  மேற்கண்டவாறு      குறிப்பிட்டனர்.
 பொதுஜன   பெரமுன  முன்னணியின்     சட்டத்தரணிகள்   சங்கத்தின்   செயலாளர்  அதுல த  சில்வா  குறிப்பிடுகையில்.
ஒட்டுமொத்த   மக்களும்   மாகாண  சபை  தேர்தலை  கோரும் பொழுது  அரசாங்கம் தேவையற்ற  ஒரு  அரசியலமைப்பினை   உருவாக்க  முயற்சிகளை  மேற்கொண்டு  வருகின்றது.  
இன்று   பொதுஜன   பெரமுன  முன்னணியே    பிரதான  கட்சியாக  காணப்படுகின்றது. இனிவரும்  காலங்களில் இக்கட்சியே     அரசியலில்  அதிகாரம் செலுத்தும்  என்பதில்  எவ்வித  மாற்றங்களும்  கிடையாது.   இன்று  ஐக்கிய  தேசிய  கட்சியிலான  அரசாங்கம் ஒரு  தரப்பினரது  தேவைகளுக்காகவே  செயற்படுகின்றது. 


Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment