போதைப்பொருள் வியாபாரம் தான் வசிக்கும் பகுதியில் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்த மாணவர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் மாணவர்களை விழிப்பூட்டும் செயற்பாடுகள் இடம்பெற்று வந்தது.
இந்த நிலையில் கிளிநொச்சி, கோணாவில் பகுதி பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு வருகை தந்திருந்த பொலிஸாரிடம் குறித்த மாணவன் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பான தகவலை வழங்கியுள்ளார்.
இதனால் குறித்த பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் நபர்கள் மாணவனுக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்து வந்துள்ளனர்.
விடயம் தொடர்பில் பலரது கவனத்துக்குக் கொண்டு சென்றும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தனது மகன் மீது இனம் தெரியாதோர் தாக்குதல் முயற்சி மேற்கொண்டனர். அதனால் மகனுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மாணவனின் தந்தை தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவன் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment