தேசிய தலைவரை தவறாக சித்தரித்த பத்திரிகை எரிப்பு!
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் வார பத்திரிகை ஒன்றின் முகப்பு பக்கத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்திற்கு பொருத்தமற்ற தலைப்புடன் வெளியான செய்தியால் குறித்த பத்திரிகையை பருத்தித்துறை இளைஞர்கள் எரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி; பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நடந்து வரும் படத்தை பிரசுரித்து ' இரவு இரண்டு மணிக்கு பெண் கேட்ட தேசிய தலைவர் ' என தலைப்பிடப்பட்டு; பத்திரிகை வெளியாகியுள்ளது.
குறித்த செய்தி தலைப்புடன் தொடர்புடைய செய்தியானது இந்தியாவை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான சங்கர் என்பவரது கதையாகும். தொடர் கொலைகளை செய்த கொலையாளியின் மரண வாக்கு மூலம் என செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த செய்திக்கு இடப்பட்ட தலைப்பு, மற்றும் படம் என்பன திட்டமிடபட்டே பிரசுரிக்கப்பட்டுள்ளன என தெரிவித்தே பருத்தித்துறை பகுதி இளைஞர்கள் பத்திரிக்கையின் பிரதியை தீயிட்டு கொளுத்தி தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளார்கள்.
0 comments:
Post a Comment