சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக, இன்னும் இரண்டு மாதங்களுக்குள் கூட்டணியொன்றை உருவாக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்கான அமைப்பின் காரியாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைப்பின் உறுப்பினர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன முன்னிறுத்தப்படாது, ராஜபக்சக்களில் ஒருவர் முன்னிறுத்தப்படும் பட்சத்தில் அந்த நபரை தோற்கடிப்பதற்கு தமது முழு பலத்தையும் பயன்படுத்தி போராடுவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் அரசியலுக்கு எதிரான அரசியலில் ஈடுபட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதவிர, ராஜபக்சாக்களுக்கெதிரான போராட்டத்தை தொடர்வதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க உட்பட்ட ராஜபக்சக்களுக்கு எதிராக செயற்படுகின்ற அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்கான அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது

இந்தக் கூட்டணியில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 65 தொகுதி அமைப்பாளர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 33 பேர் நேரடியாக தொடர்புபட்டுள்ளதாகவும், ஏனைய 53 பேர் தமது ஒத்திழைப்புக்களை வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment