நாடாளுமன்றில் குழப்பநிலை ; விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

நாடாளுமன்றில் அண்மையில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த  குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியால் இந்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதாக சபாநாயாகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்பட்ட இந்த குழுவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்கியிருந்தனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இந்த குழப்பநிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment