மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்புவதற்காக நாளை கொழும்புக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இவ்வாறு அகழ்வுப் பணிகளுக்குப் பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ஸ இதனைத் இன்று தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது,
மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று 134 ஆவது தடவையாக இடம் பெற்று வருகிறது.
மனித எச்சங்களின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைக்கு அனுப்புவது தொடர்பான கலந்துரையாடல் மன்னார் நீதவான் மற்றும் விசாரனைக்குழு அதிகாரிகள் இடையில் இடம்பெற்றது.
நாளைய தினம் முற்பகல், குறித்த மனித எச்சங்களின் மாதிரிகள், மன்னார் நீதிமன்றத்தில் இருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படவுள்ளது.
பின்னர் அங்கிருந்து அமெரிக்காவின் புளோரிடாவிற்கு கார்பன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும். என்றார்.
மன்னார் மனித புதைகுழியில் தற்போதுவரை 300 மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 294 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 23 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment