சிாியாவிலிருந்து வெளியேறும் அமொிக்கப் படை

சிரியாவிலிருந்து அமெரிக்க படையினர் சில நிபந்தனையின் அடிப்படையிலேயே வெளியேறுவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தொன் பொல்டொன் அறிவித்துள்ளார். 

இஸ்ரேல் மற்றும் துருக்கிக்கான பயணத்தின்போதே அவர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். வடக்கு சிரியாவில் உள்ள குர்திஸ் படையினர் பாதுகாப்பாக உள்ளனர் என்பது தொடர்பான துருக்கியின் உறுதிப்பாட்டை தாம் கோர உள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். 

சிரியாவில் எஞ்சியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் தோற்கடிக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிரியாவில் உள்ள அமெரிக்க படையினர் அங்கிருந்து வெளியேறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் அறிவித்திருந்த நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment