ஐ.தே.க.வை வீழ்த்த சந்திரிக்கா சதி!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் செயற்பாடுகள், ஐக்கிய தேசிய கட்சியை வீழ்த்தும் வகையில் காணப்படுவதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே ரவி கருணாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசியலில் பெரும் குழப்பநிலை அண்மையில் ஏற்பட்டிருந்தது. ஆனாலும் தற்போது அவ்விடயங்கள் சாதாரண நிலைமைக்கு வந்துள்ளன. இதனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து அரசியல் பயணத்தை சிறந்த முறையில் மேற்கொள்ள முடியுமென நம்பிக்கை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் அதனை குழப்பதற்கு பலர், சதித் திட்டங்களை தீட்டி வருவதாகவும், சுதந்திரக் கட்சியை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ள சந்திரிகா தற்போது ஐ.தே.க.வையும் அழிப்பதற்கு முயன்று வருகிறாரென்றும் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment