வட அமெரிக்க நாடான கனடாவில் ஆப்பிள் பறிக்கும் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கனடாவில் பழங்களின் விளைச்சல் மிகவும் அதிகமாக இருப்பதாலும் ஆப்பிள் பழங்களை அறுவடை செய்ய பல ஆட்கள் தேவைப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு பருவகாலத்திலும், ஆப்பிள் பழங்களைப் பறிக்க பல்வேறு நாடுகளில் இருந்து ஆட்கள் வேலைக்கு எடுக்கப்படுகின்றனர். பருவகால வேளாண் ஊழியர்கள் திட்டத்தின் (ளுயுறுP) கீழ் இந்த வேலையாட்கள் எடுக்கப்படுகின்றனர்.
கனடாவிற்கு வேலைக்குச் செல்ல முதலில் பயண விசா எடுக்க வேண்டும். பின்னர் ஆப்பிள் பறிக்கும் வேலையில் ஈடுபட ளுயுறுP யிடம் இருந்து விடுமுறை விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டால், உங்களுக்கு தங்க இடம், தினசரி தேவைகள் மற்றும் செலவுகள் உள்ளிட்ட அனைத்தையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள். இந்த வேலைக்கு சம்பளமாக 1 மணிநேரத்திற்கு 11 கனடா டாலர்கள் சம்பளமாக வழங்கப்படும். 1 கனடா டாலரின் இந்திய மதிப்பு என்பது 52.78 ரூபாயாகும்
0 comments:
Post a Comment