போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் – விசாரணைகள் ஆரம்பம்!

பிரான்ஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யெலோ வெட்ஸ் அமைப்பினர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் பொருளாதார சீர்திருத்த கொள்கைகளுக்கு எதிராக நேற்று 11 ஆவது வாரமாக போராட்டம் மேற்கொள் ளப்பட்டது.
தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் சுமார் 69 ஆயிரம் பேர் பங்கேற்றதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
குறிப்பாக பாரிசில் மாத்திரம் நான்காயிரம் பேர் ஒன்று திரண்டு ஜனாதிபதிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தையும், தடியடி பிரயோகத்தையும் மேற்கொண்டனர்.
பொலிஸாரின் இந்த நடவடிக்கையால் பல ஆர்ப்பாட்டகாரர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, ஆர்பாட்டத்தை முன்னின்று நடத்திய ஜேரோமி ரொட்ரிக்கர்ஸ் என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் அவர் கண் பார்வையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பொதுசொத்துகளுக்கு ஏற்படும் சேதத்தை கட்டுப்படுத்தவும், நாட்டின் அமைதியை கருத்தில் கொண்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதேபோல், ஆர்பாட்டக்காரர்கள் அத்துமீறி செயற்பட்டதன் காணமாகவே தடியடி பிரயோகத்தை நடத்த வேண்டி ஏற்பட்டதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் கிறிஸ்டோப் காஸ்டனர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட தடியடி பிரயோகம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் உள்துறை அமைச்சர் அதிகாரிகளை பணித்துள்ளார்.
மேலும் ஆர்பாட்டகாரர்களை அடக்கும் போது ரியோட் பொலிஸார் தங்கள் சீருடைகளில் கண்காணிப்பு கமராக்களை பொருத்திக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.


Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment