அதிர்ஸ்டவசமாக உயிர் பிழைத்தார் இளவரசர்!

பிரித்தானிய இளவரசர் பிலிப் செலுத்திச்சென்ற கார் விபத்துக்குள்ளானதில் இளவரசர் பிலிப் அதிர்ஸ்டவசமாக உயர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய ராணி இரண்டாவது எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (வயது 97) செலுத்திச் சென்ற காரே விபத்தில் சிக்கியது. 

கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சண்டிங்கம் எஸ்டேட் அருகே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 
இளவரசர் பிலிப் தனது காரை பிரதான வீதிக்கு எடுத்துச்செல்லும் போது, அவ்வழியே வந்த மற்றொரு கார் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து ஏற்பட்ட மற்றொரு காரில் இருந்த இருவருக்கு சிறு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.விபத்து நடைபெற்றதை பக்கிங்ஹாம் அரண்மனையும் உறுதி செய்துள்ள நிலையில், இளவரசருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லையென்றும் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment