சுமார் 2 மணி 27 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 7–6 (7–2), 5–7, 6–4 என்ற செட் கணக்கில் கிவிடோவாவை சாய்த்து அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை ஒசாக முதன் முறையாக கைப்பற்றியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், உலக தரவரிசையில் 4 ஆவது இடத்தில் இருந்த ஒசாகா ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார்.
இதேவேளை ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 6 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), 2 ஆம் நிலை வீரரும், 2009 ஆம் ஆண்டு சாம்பியனுமான ரபெல் நடாலும் (ஸ்பெயின்) மோதுகிறார்கள்.
இவர்கள் இருவரும் இதுவரை 52 முறை நேருக்கு நேர் மோதியிருக்கிறார்கள். இதில் 27 இல் ஜோகோவிச்சும், 25 இல் நடாலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment