பிரான்சில் மஞ்சள் மேலங்கி போராட்டத்தை கையில் எடுத்த பெண்கள்!

பாரிசில் நூற்றுக்கணக்கான பெண்கள் அமைதியான முறையில் மஞ்சள் மேலங்கி போராட்டத்தை முன்னெடுத்து சென்றனர். பிரான்சில் மஞ்சள் ஆடை போராட்டக்காரர்கள் சுமார் 50,000 பேர், பொலிசாருடன் வன்முறை மோதல்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, பெண்கள் பலர் மஞ்சள் ஆடை அணிந்து அமைதி போராட்டம் நடத்தினர். 

அவர்களில் பலர் கையில் மஞ்சள் பலூன்களை ஏந்தியிருந்தனர். மேலும் அவர்கள் பிரான்சின் தேசிய கீதத்தை பாடினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த Karen(42) என்ற பெண், அனைத்து ஊடகங்களும் வன்முறையை மட்டும் காட்டியதால், பிரச்சனைக்கான ஆணிவேரை நாம் மறந்து விட்டோம் என்று குற்றஞ்சாட்டினார். இதேபோல் Caen, northwestern France, Montceau-les-Mines, central-eastern France ஆகிய பல இடங்களில் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். குறிப்பாக, Toulouse நகரில் சுமார் 300 பெண்கள் ஒன்றாக கூடி, ‘மெக்ரோன் உங்கள் வாத்து சமைக்கப்பட்டுவிட்டது, வாத்துக்குஞ்சுகள் வீதியில் நிற்கின்றன’ என்று கோஷம் எழுப்பினர். கடந்த 8 சனிக்கிழமைகளாக நடைபெற்று வரும் மஞ்சள் ஆடை போராட்டங்கள், ஆரம்பத்தில் எரிவாயு பொருட்களின் மீதான வரி உயர்வை கண்டித்து நடைபெற்றன. 

ஆனால், தற்போது அது உயர்மட்ட வாழ்க்கை மற்றும் ஜனாதிபதி மேக்ரொனின் அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரமாக மாறியுள்ளது. முன்னதாக அமைச்சரும், அரசு தொடர்பாளருமான Benjamin Griveaux, போராட்டங்களின்போது கார்கள், ஜன்னல்கள் உடைக்கப்பட்டு நடந்த வன்முறையானது குடியரசு மீதான ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதல் என கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் அவர் மஞ்சள் ஆடை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘கிளர்ச்சியாளர்கள்’ என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment