பிரான்ஸ் காண இருக்கும் முக்கிய நிகழ்வுகள்

புத்தாண்டு பிறந்து ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், இவ்வாரம் பிரான்ஸ் காணவிருக்கும் சில முக்கிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. சிறார் பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதிரியார் ஒருவரைக் குறித்து புகார் அளிக்காததால் சிக்கலில் சிக்கியுள்ள Cardinal Philippe Barbarin மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. 

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தீவிரவாத தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், பிரான்சின் உள்துறை அமைச்சரான Christophe Castaner மற்றும் பாரீஸ் நகர மேயரான Anne Hidalgo ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

பாலியல் வன்முறைக்கெதிரான சர்வதேச மாநாடு இன்று பாரீஸில் தொடங்குகிறது. 9ஆம் திகதி புதனன்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரான், கைப்பந்து மையத்தை சந்திக்க இருக்கிறார். 2013ஆம் ஆண்டு கொல்லப்பட்ட Fiona என்னும் ஐந்து வயது குழந்தையின் தாய் Cécile Bourgeon, வாக்குமூலம் அளிக்க இருக்கிறார். 

குடிபோதையில் அவளது காதலன் குழந்தையைக் கொன்றதை மறைத்து, குழந்தை காணாமல் போனதாக பிரான்சஸயே அவள் ஏமாற்றி நாடகமாடியது பின்னர் தெரியவந்தது. 

அதே நாளில், ஷாப்பிங் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி, அதிராரப்பூர்வ குளிர்கால விற்பனை பாரீஸ் உட்பட, பிரான்சின் பெரும்பாலான பகுதிகளில் தொடங்குகிறது. 

10ஆம் திகதி வியாழனன்று Banque de France என்னும் பிரான்ஸ் வங்கி கட்டிடத்தில் 2017ஆம் ஆண்டு தீ வைத்த வழக்கில் ரஷ்ய நாடகக் கலைஞர் Pyotr Pavlensky மீது விசாரணை நடத்தப்பட உள்ளது.

12ஆம் திகதி சனிக்கிழமை மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள் மீண்டும் போராட்டங்களில் ஈடுபட உள்ளார்கள்.

13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பழங்கால கார் விரும்பிகளின் கண்களுக்கு ஒரு விருந்து.பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடக்கவிருக்கும் ஒரு கார் கண்காட்சியில் 700 பழங்கால கார்கள் பங்கேற்க உள்ளன.

பாரீஸில் 30 கிலோமீற்றர் பயணிக்க இருக்கும் இந்த கார்கள், இம்முறை பெரியவர்கள் மட்டுமின்றி சிறார்களின் உள்ளங்களையும் கொள்ளை கொள்ள இருக்கின்றன, காரணம், இந்த ஆண்டின் “தீம்”, படக்கதை புத்தகங்களில் இடம் பெற்றுள்ள காா்கள் ஆகும்.
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment