ஓட்டமாவடி பகுதியில் வான் மோதியதில் 5 மாடுகள் பலி!


மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் தியாவட்டவான் பிரதேசத்தில் வேன் மோதியதில் தெருவில் நடமாடிய 5 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நேற்று மாலை ஓட்டமாவடி பாலத்தை அண்மித்த தியாவட்டவான் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


புதிய ஆளுநரின் பதவியேற்பு நிகழ்விற்காக சென்றிருந்த ஆதரவாளர்கள் பயணித்த குறித்த வேன், திருகோணமலையிலிருந்து காத்தான்குடி நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.


இந்த விபத்து காரணமாக வேனின் முன்பக்கம் நொருங்கியுள்ளதுடன், விபத்தில் சிக்கிய 14 வயதான பாடசாலை மாணவன் ஒருவருக்கும் சிறுகாயம் ஏற்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment