ஆசியா பீபி வழக்கில் வன்மம் காட்டும் எதிர்ப்பாளர்கள்!

இறைதூஷணம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசியா பீபி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து செய்யப்பட்ட மேல் முறையீடுகளை பாகிஸ்தான் தள்ளுபடி செய்துள்ளதையடுத்து அவர் கனடாவுக்கு செல்ல இருக்கிறார்.
ஏற்கனவே ஆசியாவுக்கு கனடா புகலிடம் கொடுக்க முடிவு செய்துள்ளதோடு, அவரது மகள்களும் ஏற்கனவே கனடாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே தற்போது அவரும் தனது மகள்களுடன் இணைந்துகொள்ள இருக்கிறார்.
ஆனால் அவரை எப்படியாவது கொலை செய்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் இஸ்லாமியவாதிகள் கண்ணில் படாமல் அவரை பாகிஸ்தானை விட்டு வெளியேற்றுவதுதான் பெரிய பிரச்சினை என அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்தனர்.
இஸ்லாமியவாதிகள் ஆசியாவை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்னும் முடிவில் இருக்கும் நிலையில், அவர் தப்ப முடியாது என்றும், உலகெங்குமே இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள், எனவே எங்கு சென்றாலும் அவர் கொல்லப்படுவார் என மிரட்டியுள்ளனர்.
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இறைதூஷணம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் தேவை என நிர்ப்பந்தித்த நிலையில், ஒரு ஆதாரம் கூட கிடைக்கததால் ஆசியா மீதான வழக்கு தள்ளுபடி செய்யபட்டுள்ளது.
சொல்லப்போனால், இதே விடயம் இவ்வளவு பெரியதாக ஆகியிருக்காவிட்டால், ஆசியா மீது குற்றம் சாட்டியவர்களே பொய் சத்தியம் செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பர் என்று கூறியுள்ள, தீர்ப்பு வழங்கியவர்களில் ஒருவரான Asif Saeed Khan Khosa என்னும் உச்ச நீதிமன்ற நீதிபதி, இதுதான் இஸ்லாம் என்று உலகுக்கு நாம் காட்டும் இஸ்லாமைக் குறித்த தோற்றம் எனக்கு அதிக வருத்தத்தையும் துக்கத்தையும் கொடுக்கிறது என்றார்.
தீர்ப்பு குறித்து அறிந்த ஆசியா, ’எல்லோருக்கும் மிக்க நன்றி, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நான் விடுதலை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது, நான் கனடாவுக்கு சென்று எனது மகள்களை கட்டி அணைத்துக் கொள்ளப்போகிறேன்’ என்று கூறியதாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவிக்கிறார்.


Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment