இந்தியாவிடம் மண்டியிட்டது நியூசிலாந்து!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்தியா அணி 90 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்தியா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
மவுண்ட் மௌனன்குய் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுதத்தாட தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய இந்தியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 324 ஓட்டங்களை குவித்தது.
இதன்போது, ரோஹித் சர்மா 87 ஓட்டங்களையும், ஷிகர் தவான் 66 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி 43 ஓட்டங்களையும், அம்பத்தி ராயுடு 47 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
மேலும், டோனி ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களையும், கேதர் ஜாதவ் ஆட்டமிழக்காது 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் ட்ரென்ட் போல்ட் மற்றும் லொக்கி பெர்குசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து, 325 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூசிலாந்து அணி, 40.2 ஓவர்கள் நிறைவில், 234 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா அணி 90 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதில் நியூசிலாந்து அணி சார்பில், அதிகபட்ச ஓட்டமாக டக் பிரெஸ்வெல் 57 ஓட்டங்களை. பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, நாளை மறுதினம் மவுண்ட் மௌனன்குய் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment