பனை மரத்தில் ஏறியபோது திடீர் மாரடைப்பு

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூலித் தொழிலாளி ஒருவர், பனை மரத்தின் உச்சியில் தலைகீழாக தொங்கியபடியே மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(50). பனை மரம் ஏறும் தொழிலாளியான இவருக்கு மனைவி, ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில், கணேசன் நேற்று காலை பதநீர் எடுக்க பனை மரத்தில் ஏறியுள்ளார். மரத்தின் உச்சிக்கு சென்ற அவர் திடீரென தலைகீழாக தொங்கியுள்ளார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். 

அதனைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்களுடன் அங்கு வந்த பொலிசார் கணேசன் கிழே விழுந்து விடாமல் இருக்க வலையை விரித்து கட்டினர். ஆனால், மரத்தின் உச்சிவரை செல்ல பெரிய ஏணி எதுவும் கிடைக்கவில்லை. மேலும் மரத்தில் ஏறி கணேசனை மீட்கவும் முடியவில்லை. ஏனெனில் மரத்தில் உச்சியில் எடை தாங்காது என்ற நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் பனை மரத்தின் மீது மோதி கணேசனை கீழே விழ வைக்க முயற்சி செய்யப்பட்டது. 

ஆனால், ஒரு கட்டத்தில் கணேசன் மரத்தில் சறுக்கியபடியே வலையில் விழாமல் கீழே விழுந்துவிட்டார். இதனால் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அத்துடன் அவருக்கு முதலுதவி செய்து, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், கணேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். மேலும், கணேசன் மர உச்சியில் கணேசன் ஏறியபோதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், பொலிசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment