பெற்ற பிள்ளையை துடிதுடிக்க கொலை செய்த தாய்!

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் தகாத உறவுக்கு இடையூறாக இருப்பதால் பெற்ற பிள்ளையை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாயார் பொலிசில் சிக்கியுள்ளார்.
குறித்த சம்பவத்தில் தொடர்புடைய பெண், தானும் கிணற்றில் குதித்து நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த வீரகனூர் பகுதியில் கிணற்றில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் காவல்துறை உதவியுடன் அப்பெண்ணை மீட்டுள்ளனர். மீட்கப்பட்டவர், பிரியங்கா காந்தி என்பது தெரியவந்தது.
ஆனால் அவரது நான்கு வயது குழந்தை சிவானி உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசாரிடம், பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடிப்பதற்காக முகமூடி அணிந்த நபர் தன்னையும் தன் குழந்தையையும் கிணற்றில் தள்ளியதாக கூறியுள்ளார் பிரியங்கா.
ஆனால் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் வழிப்பறி செய்வதற்கான எந்தத் தடயமும் அடையாளமும் தென்படவில்லை என பொலிசாருக்கு தெரியவந்தது.
இதில் சந்தேகமடைந்த பொலிசார் பிரியங்காவிடம் மேலும் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
கணவர் சங்கர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால், பெண் குழந்தையோடு தனிமையில் வசித்து வந்த பிரியங்காவுக்கு பல ஆண்களோடு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
அவ்வப்போது தன் மனைவியிடம் பேசுவதற்காக தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் சங்கர், குழந்தையிடம் பேசும்போது அம்மா வேறு ஆண்களிடம் பேசுவதை யதாரத்தமாக அக்குழந்தை கூறியதாக தெரிகிறது.
இதனால், ஆத்திரமடைந்த பிரியங்கா குழந்தையைக் கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதும், பின்னர் இரவு முழுவதும் கிணற்றின் ஓரம் காத்திருந்து அதிகாலை மக்கள் நடமாட்டம் தொடங்கியதும் தானும் கிணற்றில் இறங்கி தத்தளிப்பது போன்று நடித்தது தெரியவந்துள்ளது.
தமது குற்றத்தை மறைக்க கொள்ளையர்களால் கிணற்றில் தள்ளப்பட்டதாக நாடகத்தை அரங்கேற்றியதும் விசாரணையில் அம்பலமானது.
இதனையடுத்து காவல்துறையினர் பிரியங்காவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளனர்.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment