மாணவியை தவறாக வீடியோ எடுத்தவர் கைது

பாடசாலை மாணவியை ஆபாசமாக  வீடியோ எடுத்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கம்பஹாவில் பூகொட பகுதியில், நடந்துள்ளது.

குறித்த மாணவி பாடசாலைக்கு செல்வதற்காக ஹங்வெல்லவில் இருந்து கிரிதிவெல வரை பயணித்த தனியார் பேருந்தில் சென்றுள்ளார்.  மாணவியுடன் அவரது தந்தையும் பயணித்துள்ளார். 

பேருந்தின் பின் கதவருகே அமர்ந்திருந்த நபர் மாணவியின் ஆடைக்கு கீழ் கையடக்கத் தொலைபேசியை வைத்து காணொளி எடுத்துள்ளார். 

இதனை அவதானித்த நபர் ஒருவர் மாணவியின் தந்தையிடம் தெரிவிக்கவே, பேருந்தில் பயணித்த அனைவரும் ஒன்றிணைந்து குறித்த நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைந்துள்ளனர்.

அவரது கையடக்க தொலைபேசியை சோதனையிட்ட போது பேருந்தில் பயணித்த பலரை தவறாக எடுத்த காணொளிகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment