துப்பாக்கிப் பிரயோகம் கிண்ணியாவில் பதற்றம்

ஆற்றுப்பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். இதன் போது ஆற்றில் மூழ்கி இருவர் காணாமால் போயுள்ளனர்.

இந்தச் சம்பவம் திருகோணமலை – கிண்ணியா மஹாவலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. வானத்தை நோக்கி துப்பாக்கிச்  சூடும்  நடத்தப்பட்டுள்ளது.

மண் அகழ்வுப் பணியில் ஈடுபட்டு வந்த மூவர் மீது கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதனால் குறித்த இளைஞர்கள் மூவரும் கடலில் பாய்ந்து மூழ்கியுள்ளனர். இதில் ஒருவர் தப்பித்துள்ளதுடன் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

காணாமல்போன இளைஞர்கள் இருவரும் கிண்ணியா இடிமன் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது.

காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் பொதுமக்களுடன் சேர்ந்து கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவ இடத்தில் பொலிஸார் உட்பட முப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment