கனடாவில் அடைக்கலம் தேடிய இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல்
இஸ்லாமிய சட்டங்களை வெறுத்து ஒதிக்கிய சவுதி அரேபிய இளம் பெண் கனடாவில் அடைக்கலம் வழங்கப்பட்ட நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை அடுத்து 24 மணி நேர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள இருப்பதாக அகதிகளுக்கான ஆணையம் உறுதி அளித்துள்ளது.

கடுமையான இஸ்லாமிய சட்டங்களை எதிர்த்ததால் கடும் நெருக்கடிக்கு உள்ளான 18 வயது ரஹப் முகமது, தமது குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி சவுதியில் இருந்து வெளியேறினார்.

அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரும் நோக்கில் குவைத்தில் இருந்து தாய்லாந்து சென்ற அவருக்கு சட்ட சிக்கல் ஏற்படவும், ஐக்கிய நாடுகள் மன்றம் தலையிட்டு அவருக்கு கனடாவில் அடைக்கலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த வார இறுதியில் கனடா வந்து சேர்ந்த ரஹப் தமது சுதந்திரத்தை அனுபவிக்க தொடங்கியுள்ளார் என உள்ளூர் பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளன.

எஞ்சிய கனேடியர்கள் போன்று ஆடை உடுத்த துவங்கியுள்ளதாக கூறும் ரஹப், தமது குடும்ப பெயரை இனிமுதல் பயன்படுத்தப்போவது இல்லை எனவும் அறிவித்துள்ளார்.

மட்டுமின்றி தமது குடும்பத்தாரால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறும் ரஹப், சவுதியில் பிராந்திய ஆளுநராக செயல்படும் தமது தந்தை செல்வாக்கு மிகுந்தவர் என்பதால் எதுவும் நடக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ரஹபின் கோரிக்கையை ஏற்று அவருக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர் தனிமையை உணராமல் இருக்கும் பொருட்டு ஒரு கனேடிய குடும்பத்தில் அவரை விருந்தினராக இணைத்துக் கொள்ளும் பொருட்டு ஏற்பாடுகள் செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இஸ்லாமிய சட்டங்களை கடுமையாக விமர்சித்து வரும் எஞ்சிய இளம் பெண்களுக்கு தமது செயல்பாடு ஒரு முன்மாதிரியாக அமைய வேண்டும் எனவும்,

பல இளம் பெண்கள் சவுதி அரேபியாவில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் அவர் தமது ஆவலை வெளிப்படுத்தியுள்ளார்.
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment