2000 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி திட்டம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக ஊக்குவிப்புக்கான துரித அபிவிருத்தித் திட்டத்தை அரசாங்கம் மேற்கொள்ள வுள்ளது. இதற்காக 2000 மில்லியன் ரூபாயை செலவிடவுள்ளது
இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
இதுதொடர்பில் அமைச்சரவையில்  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்தில் ‘மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அபிவிருத்தி கைவிடப்பட்டிருந்ததினால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளா தார அடிப்படை வசதி மற்றும் சமூக அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வாழ்வாதார நிவாரணத்தை வழங்கி அந்த பிரதேச அபிவிருத்தியை துரிதபடுத்தும் பொருட்டு விசேட திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு பரிந்துரை க்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக விவசாயம், கைத்தொழில், கடற்றொழில் மற்றும் சேவைத் துறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி இவற்றின் கீழான வேலைத்தி ட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
அத்தோடு, பொருளாதார அடிப்படை வசதி, சமூக அடிப்படை வசதி, ஜீவனோ பாயம் மற்றும் சுயதொழில் வாய்ப்பு மற்றும் சிறிய கைத்தொழில்கள் மற்றும் தொழில் முயற்சி போன்ற 4 துறைகள் ஊடாக இந்த திட்டம் விரைவாக நடை முறைப்படுத்துவதற்காக 2000 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.
இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி திறனாற்றல் அமைச்சரும், பிரதம ருமான ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment