சாதனை படைக்கும் ரவுடி பேபி

2018 இல் வெளிவந்த மாரி 2'  படத்தில் இடம் பெற்ற 'ரவுடி பேபி' பாடலின் வீடியோவை 2019 இல் கடந்த வாரம் தான் யு டியுபில் வெளியிட்டார்கள். 

 பாடல் வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே 4 கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.

 இந்த ஆண்டின் முதல் பெரிய படங்கள் என்று பேசப்படும் 'பேட்ட, விஸ்வாசம்' ஆகிய படங்களின் பாடல்கள், கடந்த வருடத்தின் பெரிய படம் என பேசப்பட்ட 'சர்கார்' படத்தின் பாடல்கள் ஆகியவற்றின் பார்வைகளையெல்லாம் சர்வ சாதாரணமாக முறியடித்து இந்தப் பாடல் முன்னேறிக் கொண்டிருக்கிறது. 

தொடர்ந்து இந்தப் பாடலை தினமும் பல லட்சம் பேர் திரும்பத் திரும்பப் பார்த்து வருவதால் அதன் பார்வைகளும் ஏறிக் கொண்டே வருகிறது. அடுத்த சில நாட்களில் இந்தப் பாடல் 5 கோடி பார்வைகளைக் கடந்துவிடும்.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment