வெளியானது பேட்ட ; சில ஜோடிகளுக்குத் திருமணம்


ரஜினி நடித்துள்ள பேட்ட படம் வெளியாகி உள்ளது. விஸ்வாசம் பட ரிலீஸின் போது சில அசம்பாவிதங்கள் நடந்தேறி உள்ள நிலையில், ரஜினி பட ரிலீஸில் சில சுவாரஸ்யமாக நிகழ்வுகள் நடந்தேறி உள்ளன. 

பேட்ட படம் வெளியான சில தியேட்டர்களில் சில ஜோடிகளுக்கு திருமணம் நடந்துள்ளது. 

ரஜினியின் தீவிர ரசிகரான அன்பரசு என்பவர், தன் காதலி காமாட்சியை சென்னை உட்லேண்ட்ஸ் தியேட்டரில் திருமணம் செய்து கொண்டுள்ளார். 

ஏழைத் தம்பதியான இவர்களுக்கு, ரஜினி மக்கள் மன்றம் சார்பாக திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 

திருமணம் முடிந்த பிறகு தம்பதிக்குச் சீர்வரிசை வழங்கியும் தியேட்டரின் வெளியில் உணவு வழங்கியும் அமர்க்களப்படுத்தியுள்ளனர். 

இதேபோன்று தஞ்சை சாந்தி திரையரங்கிலும் ஒரு தம்பதிக்கு திருமணம் நடந்துள்ளது.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment