உலக தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை பின்னணியில் சி.வி.கே.: சச்சிதானந்தம்!

உலக தமிழாராய்ச்சி மாநாடு படுகொலையின் பின்னணியில் சி.வி.கே. சிவஞானமும் செயற்பட்டதாக சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.
உலக தமிழாராய்ச்சி மாநாட்டின்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று  அனுஸ்டிக்கப்பட்டது.
வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக முற்றவெளி மைதானத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட உலக தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு அவர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.
இதேவேளை, மாநாட்டை நடத்துவதற்காக திறந்தவெளி அரங்கை நாம் கோரியிருந்த நிலையில், அக்காலப்பகுதியில் யாழ். மாநகர சபை முதல்வராகவிருந்த அல்பர்ட் துரையப்பா மற்றும் அவரது உதவியாளராகவிருந்த சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் திறந்தவெளி அரங்கை வழங்க மறுப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், உலக தமிழாராய்ச்சி மாநாடு படுகொலையை செய்தார்கள் என்று கூற முடியாத போதிலும், இப்படுகொலைகளுக்கு காரணமாக இவர்கள் இருவரும் செயற்பட்டனர்” என்றே கூற வேண்டும் எனத் தெரிவித்தார்.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment