பிரெக்ஸிற் ஒப்பந்தம் : பிாித்தானியா


மார்ச் மாதம் 29 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறவுள்ள நிலையில் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படுமா?  எனும் சந்தேகமும் நிலவிவருகிறது.
இந்நிலையில் பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை தாமதப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஆனாலும் பிரதமர் தெரேசா மே பிரெக்ஸிற்றை தாமதப்படுத்துவதை தொடர்ந்தும் நிராகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
டெலிகிராப் பத்திரிகையால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையை பிரெக்ஸிற் செயலாளர் ஸ்டீபன் பார்க்லே மறுத்துள்ளதுடன் பிரெக்சிற்றை பிற்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இச்செய்தி குறித்து கருத்து வெளியிட்டுள்ள அயர்லாந்து அரசு பிரெக்ஸிற்றை தாமதப்படுத்துவதற்கு பிரித்தானியா கோரிக்கை வைத்தால் தாம் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம் என தெரிவித்துள்ளது.
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment