புலிகளால் மத்திய வங்கி தாக்கப்பட்டு இன்றுடன் 23 வருடங்கள் பூர்த்தி!

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம், இலங்கை மத்திய வங்கியின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தி இன்றுடன் 23 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி மீதான குண்டுத் தாக்குதல் காரணமாக சுமார் 91 பேரின் உயிர்களை காவுகொண்டதுடன், ஆயிரத்து 1400 பேருக்கு காயம் ஏற்படுத் தியிருந்தது.

1996 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகனால் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டது.

அன்றய தினம் முற்பகல் 10.45 அளவில் 200 கிலோகிராம் வெடிபொருட்களுடனான பாரவூர்தி இலங்கை மத்திய வங்கியின் கட்டிடத்திற்குள் நுழைந்து வெடிக்கச் செய்ய முயற்சிக்கப்பட்டது.

எனினும், கட்டிடத்தின் வெளியில் உள்ள இரும்பு வேலிகள் காரணமாக மத்திய வங்கி வளாகத்திலேயே குறித்த பாரவூர்தி வெடித்து சிதறியது. இதனையடுத்து 10 மாடிகளை கொண்ட மத்திய வங்கியின் முன்பகுதி முற்றாக சேதமடைந்தது.

இதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட சிலருக்கு எதிராக வழக்கு தாக்கலும் செய்யப்பட்டது.

தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விடுதலைப் புலிகளின் தேசிய தலைவர் உள்ளிட்ட சிலருக்கு 200 வருடங்கள் சிறைதண்டனை விதித்து அப்போதைய உயர் நீதிமன்ற நீதிபதி சரத் அபயபிட்டிய தீர்ப்பளித்தமையும் குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment