யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!


பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிக்குமாறு வலியுறுத்தி, வல்லமை சமூக மாற்றத்திற்கான இயக்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றி னை மேற்கொண்டனர்.
யாழ்.திருநெல்வேலி சந்தை பகுதியில் இன்று இந்த போராட்டம் முன்னெடுக் கப்பட்டது.
இதன்போது ஒன்று கூடிய போராட்டக்காரர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்குமாறு கோரி பதாகைகளை ஏந்தி  போராட் டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து நடைபவனியாக அங்கிருந்து பலாலி வீதியூடாக பரமேஸ்வர சந்திவரைச் சென்று, அங்கிருந்து இராமநாதன் வீதியூடாக யாழ்.பல்கலைக்கழக வாயிலை அடைந்தனர்.
பல்கலைக்கழக வாயிலிலும் சில நிமிடங்கள் போராட்டத்தினை முன்னெடுத்த  வல்லமை சமூக மாற்றத்திற்கான இயக்கத்தினர், பின்னர் அங்கிருந்து களைந்து சென்றனர்.
யாழில் பதின்ம வயது சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள் ளப்பட்டு வருகின்றமை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment