தென்னாபிரிக்காவை வீழ்த்தியது இலங்கை

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களுக்குள் சுருண்டுள்ளது.

டர்பனில் நேற்று ஆரம்பமாகிய மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன களத்தடுப்பை தேர்வுசெய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரக்க அணி 59.4 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸிக்காக பெற்றது.

மக்ரம் 11 ஓட்டத்தையும், எல்கர் டக்கவுட் முறையிலும், அம்லா 3 ஓட்டத்தையும், பவுமா 47 ஓட்டங்களையும், டூப்பிளஸிஸ் 35 ஓட்டங்களையும், டீகொக் 80 ஓட்டத்தையும், பிலேண்டர் 4 ஓட்டத்தையு, மஹாராஜ் 29 ஓட்டங்களையும், ரபடா 3 ஓட்டங்களையும், ஸ்டெய்ன் 15 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்ததனர்.

களத்தில் ஒலிவர் எதுவித ஓட்டமின்றி ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் விஸப பெர்னாண்டோ 4 விக்கெட்டுக்களையும், கசூன் ராஜித 3 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மல் மற்றும் லஸித் எம்புலுதெனிய ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி இரண்டு ஓவர்களின் முடிவில் எதுவித விக்கெட் இழப்புகளுமின்றி 6 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடி வருகிறது.

ஆடுகளத்தில் திமுத் கருணாரத்ன 6 ஓட்டங்களுடனும், லஹிரு திரிமன்ன எதுவித ஓட்டங்களின்றியும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment