யு டியூபில் முதலிடம் பிடிக்கும் ரௌடி பேபி

இந்தியத் திரையுலகத்திற்கே யு டியூபின் தாக்கத்தைத் தெரியப்படுத்திய பாடல் ஒய் திஸ் கொலவெறி. அந்தப் பாடலுக்குப் பிறகு பல இந்திய மொழிப் பாடல்கள் யு டியுபில் தனிப் பெரும் சாதனையைப் படைத்தன.

ஹிந்திப் பாடல்கள் சர்வ சாதாரணமாக 200 மில்லியன் பார்வைகளை யுடியூபில் கடந்து வருகின்றன. அந்த சாதனையை தமிழ்ப் படங்கள் பிடிக்க முடியுமா என்ற ஏக்கம் தமிழ் ரசிகர்களுக்கு இருந்தது. 

அதை விரைவில் மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரௌடி பேபி பாடல் பிடிக்கும் என்பது உறுதி.


இன்று, ரௌடி பேபி பாடல் தென்னிந்திய மொழித் திரைப்படப் பாடல்களில் நம்பர் 1 இடத்தை யுடியூபில் பிடித்துள்ளது. கடந்த மாதம் ஒய் திஸ் கொலவெறி பாடலின் நம்பர் 1 சாதனையை தெலுங்குப் படமான பிடா படத்தின் வச்சிந்தே பாடல் முறியடித்து நம்பர் 1 இடத்தைப் பிடித்தது.

அந்த சாதனையை வச்சிந்தே பாடலால் ஒரு மாதம் மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. இப்போது நம்பர் 1 இடத்தை ரௌடி பேபி பாடல் பிடித்துவிட்டது.

இந்தப் பாடலை தினமும் பல லட்சம் பேர் பார்த்து வருகின்றனர். பாடல் வெளியான 37 நாட்களிலேயே இப்படி ஒரு தனிப் பெரும் சாதனையை ரௌடி பேபி படைத்துள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள்ளாகவே 200 மில்லியன் சாதனை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment