அவர்களை ஏன் காப்பாற்றினீர்கள்??? ரஞ்சன் ராமநாயக்க கருத்து

நாடாளுமன்ற மின்னுயர்த்தியினுள் சிக்கிய 12 எம்.பி.க்களையும் ஏன் காப்பாற்றினார்கள். அதற்குள்ளேயே விட்டு சாகடித்திருக்கலாம் என்றே மக்களின் எதிர்பார்ப்பாகும். இவ்வாறு  நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கோப் குழு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற மின்னுயர்த்தியினுள் 12 எம்.பி.க்கள் சிக்கிக்கொண்டமை தொடர்பில் இலங்கையில் மட்டுமன்றி உலக நாடுகள் வரை பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் இங்குள்ள சமூக வலைத்தளங்களைப்பார்த்தால்   பாராளுமன்ற மின்னுயர்த்தியினுள் சிக்கிய 12எம்.பி.க்களையும் ஏன் காப்பாற்றினார்கள் ? அதற்குள்ளேயே விட்டு சாகடித்திருக்கலாம். வீணாக காப்பாற்றிவிட்டார்கள், மின்னுயர்த்தி செயலிழந்து நிற்காமல் அறுந்து விழுந்திருக்கலாம் என மக்கள் சபித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மேற்கொண்டுவரும் மோசடிகள் காரணமாக மக்கள் எங்கள் மீது சாபமிடுகின்றனர். அந்தளவுக்கு மக்கள் விரக்தியடைந்துருக்கின்றனர். இந்த நிலையை மாற்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார்.#RanjanRamanayake #ParliamentLift #SLPoliticalCrisis #TamilNewsKing #SLParliament #MinistersCabinet
Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment