"கம்பரெலிய" வேலைத்திட்டம் முல்லைத்தீவில்...!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் கம்பரலியதிட்டத்தின் கீழ் 126 வேலைத்திட்டங்கள் 137.4 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


யுத்தத்தினாலும் ஆழிப்பேரலையினாலும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறுபட்ட தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் கம்பரலிய திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் 126 வேலைத்திட்டங்கள் 137.4 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் சிபாரிசுகளுக்கு அமைய 21.3 மில்லியன்ரூபா செலவிலும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் சிபாரிசுக்கு அமைய 93.1 மில்லியன் ரூபாசெலவிலும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்த்தானின் சிபாரிசுகளுக்கு அமைய 23 ஆயிரம் செலவிலும்என சுமார் 137.4 மில்லியன் ரூபாசெலவில் 126 வேலைத்திட்டங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைப்பற்று புதுக்குடியிருப்பு ஓட்டுசுட்டான் துணுக்காய் மாந்தை கிழக்கு ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் மேற்படி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


#முல்லைத்தீவு #கம்பரலிய #வேலைத்திட்டம் #Mullaitivu #Gamperaliya #ParliamentNews #TamilNewsKing
Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment