நியமனம் வழங்கியும் கடமைகளைப் பொறுப்பேற்காத ஆசிரியர்கள்

வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் 249 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்ட நிலையில் இதுவரை 145 பட்டதாரிகளே தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதாக கல்வி திணைக்களத் தகவல்கள் வெெளயௌாகியுள்ளன.

வடக்கு மாகாணத்தில் அண்மையில் 249 பட்டதாரிகளுக்கு அண்மையில் ஆசிரியர் நியமனம்  வழங்கப்பட்டது .

இதில் அதிக பட்சமாக கிளிநொச்சி கல்வி வலயத்துக்கு 48 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தும் இன்று வரை 32 ஆசிரியர்கள் மட்டுமே  பணியைப் பொறுப்பெடுத்தனர்.

மடுவில் 45 ஆசிரியர்களில் 28 பேரும், முல்லைத்தீவில் 41 ஆசிரியர்களில் 34 பேரும், மன்னாரில் 29 ஆசிரியர்களில் 20 பேரும் கடமையைப் பொறுப்பேற்றுள்ளனர்.

துணுக்காயில் 24 பேர் நியமிக்கப்பட்ட நிலையில் 13 பேரும், வவுனியா தெற்கில் 17 பேரில் மூவரும், வவுனியா வடக்கில் 19 ஆசிரியர்களில் 12 பேரும் கடமைகளைப் பொறுப்பெடுத்துள்ளனர். என்று அத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத்தெரிவிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment