எண்மரைக் கொலை செய்தவருக்கு கனடாவின் அதிரடி

கனடாவில் இலங்கையர் உள்ளிட்ட 8 பேரை கொலை செய்த   கொலையாளி ப்ருஸ் மெக் ஆத்தருக்கு அந் நாட்டின் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 

2010 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அவர் இந்த கொலைகளைப் புரிந்துள்ளார். 

67 வயதான மெக் ஆர்த்தர், ஸ்கந்தராஜா நவரட்ணம் மற்றும் க்றிஸ்ண குமார் கணகரட்ணம் ஆகிய இலங்கையர்கள் உள்ளிட்ட எண்மரைக்   கொலை செய்து, அவர் காணிப் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இடங்களில் புதைத்திருந்தார்.

குறித்த தகவல் கிடைக்கப்பெற்றமைக்கு அமைய எட்டு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன. 

விசாரணைகளில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 67 வயதான அவருக்கு 25 ஆண்டுகளாக பிணைக்கு விண்ணப்பிக்க முடியாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment