ஸ்கைப்பில் இனி பேக்ரவுண்டை பிளர் செய்யலாம்!

ஸ்கைப் வீடியோ காலில் இனி பேக்ரவுண்டை பிளர் செய்யும் அம்சத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

வெளிநாடுகளில் வேலை செய்யும் உறவினர்களிடம்அனைவரிடம் பேச ஸ்கைப்பைதான் அதிகமாக பயன்படுத்துகிறோம். வீடியோ கால் செய்ய பல புது செயலில்கள் வந்தாலும் ஸ்கைப்பைபோல் பிரபலமாகவில்லை . மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் போல அதிக குவாலிட்டிகொண்ட வீடியோ கால் வசதியை மற்றநிறுவனங்களால் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடியவில்லை.


ஸ்கைப் தற்போது அறிமுகப்படுத்தி உள்ள பேக்ரவுண்ட் பிளர் ஆப்ஷன் மூலம்வீடியோ காலில் , உங்களுக்கு பின் இருக்கும் இடங்களை பிளர் செய்யமுடியும்.ஸ்கைப்பில் உள்ள செயற்கை நுண்ணறிவு திறனால், மனிதர்களை கண்டறிய முடியும் .எனவேநம்மை தவிற மற்றஇடங்களை பிளர் செய்யும். மேலும் பேக்ரவுண்டை முற்றிலுமாக ரிமூவ் செய்யும் ஆப்ஷனும் இதில் உள்ளது என்பது மேலும் சிறப்பு. குறிப்பிட்ட இடங்களை மட்டும் தேர்வு செய்தும் பிளர் செய்யலாம்.

புதிய ஸ்கைப் வெர்ஷனில் இந்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த வசதி கணினி மற்றும் மடிக்கணினிகளில் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த அம்சத்தை ஸ்மார்ட்போன்களிலும் கொண்டு வரும் முயற்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இறங்கியுள்ளது.
Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment