சபரகமுவ பல்கலைக்கழகத்தின் விவசாய பீட மாணவர்களுக்கு வகுப்புத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
குறித்த பல்கலையின் 54 மாணவவர்களுக்கே வகுப்புக்களுக்கு ஒரு வாரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பகிடிவதையால் ஏற்பட்ட மோதலையடுத்து இந்தத் தீர்மானத்துக்கு வந்ததாக துணைவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.
சபரகமுவ பல்கலைக்கழகத்தின் விவசாய பீட முதுநிலை மாணவர்கள் மற்றும் புதுமுக மாணவர்களுக்கு இடையே பகிடிவதையையடுத்து மோதல் நிலை ஏற்பட்டது.
அதுதொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
0 comments:
Post a Comment